ராதிகா சீரியல் ட்ரெயிலரை இயக்கிய சமுத்திரகனி……!

சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர். பிறகு, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ’வாணி ராணி’, ‘சந்திரக்குமாரி’ என தொடர்ந்து ராதிகாவின் சீரியல்கள் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்தது .

சந்திரக்குமாரி சீரியலில் இருந்து மட்டும் சில காரணங்களால் விலகினார்..

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியலுடன் சான் டிவியில் நுழைகிறார் ராதிகா. ’சன் டிவி-யில் நாங்கள் ஆக்‌ஷனுக்கு திரும்பி விட்டோம். விரைவில் உங்களை சந்திக்கிறோம். ஆசிர்வதியுங்கள்’ என தஙகியது ட்விட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’இயக்குநர் சமுத்திரக்கனி எனக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்களைக் கொடுக்கிறார். நாங்கள் இருவரும் சின்னத்திரைக்கு திரும்புவதை இது குறிக்கிறது’ என இன்னொரு ட்வீட்டும் போட்டிருந்தார் ராதிகா.

அதைப் பார்த்த ரசிகர்கள், ‘சமுத்திரக்கனி மீண்டும் சின்னத்திரைக்கு வந்துவிட்டாரா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

`ராடான் நிறுவனம் நான் வளர்ந்த இடம். `அரசி’ சீரியலை இயக்கினேன். இப்போ புது சீரியலுக்கான டிரெய்லர்ல வொர்க் பண்ணினேன். ஆனால், அதன் இயக்குநர் நான் இல்லை. அதேசமயம், ராடான் நிறுவனம் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் தயார்” என்று இதற்கு சமுத்திர கனி கூறியுள்ளார்.