எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக ஒப்பந்தம்….!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்து வருகிறார்.

‘கேப்மாரி’ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துள்ளது. இதனால் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

இதில் நாயகனாக சமுத்திரக்கனியும், முக்கியக் கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வாலும் நடித்து வருகிறார்கள்.