டிக் டாக் தடையினால் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது ; சம்யுக்தா ஹெக்டே

இந்திய மக்களிடையே பிரபலமாகி வரும் செயலி டிக் டாக். இதில் பல்வேறு பிரபலங்களும் இணைந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இதே வேளையில், டிக் டாக் செயலியினால் பெரும் சர்ச்சையும் உருவாகியுள்ளது. மதரீதியிலான வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வீடியோக்கள் அதிகமாகி வருவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே :-

“ஒரு தளத்தை தடை செய்வதன் மூலம் அந்த தளத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது. அந்தத் தளம் இல்லையென்றாலும் அவர்களது கூச்சப்பட வைக்கும் விஷயங்களை பதிவேற்ற மக்கள் வேறொரு தளத்தைக் கண்டெடுப்பார்கள். பின் குறிப்பு: எப்படியும் டிக் டாக்கிற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி