சான் பிரான்சிஸ்கோ :

 

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பே ஏரியா என்று சொல்லப்படும் கடலோர பகுதியில் உள்ள ஆறு கவுண்டிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற 3 வாரம் தடை.

கலிபோர்னியாவில் மொத்தம் 511 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட, பே ஏரியா பகுதியில் மட்டும் 277 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடு்க்கப்பட்டுள்ளது.

தடை அறிவுப்பு வந்த உடன் : ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் செல்ல காத்திருக்கிறார்கள்

பே ஏரியா எனும் இப்பகுதியில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, சான்டா கிளாரா, சான் மேடியோ, மாரின், கான்ட்ரா கோஸ்டா மற்றும் அலமேடா உள்ளிட்ட ஆறு கவுண்டிகளில் உள்ள சுமார் 70 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள மக்கள், உணவு, மருந்து பொருட்கள் வாங்க, நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உதவ மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கபடுவார்கள். மேலும், வெளி மாவட்ட, மாகாண மக்கள் யாரவது தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நினைத்தால் அவர்களுக்கு அனுமதிவழங்கப்படும்.

கடைக்குள் கூட்டமாக நுழையாமல் இருக்க வாசலில் காவலிருக்கிறார் கடைக்காரர்

வேறு எதற்காகவும் நடந்தோ, சைக்கிளிலோ, வேறு எந்த வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகள் வைத்திருப்போர், அதனை வெளியில் நடைபழக அனுமதிக்கப்படுவர்.

இந்த தடை இன்று தொடங்கி ஏப்ரல் 7 வரை மூன்று வார காலத்திற்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் ஏராளாமான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.