’ நடிகர் சஞ்சய் தத் நிஜமாகவே போராளி’’ கே.ஜி.எஃப். இயக்குநர் புகழாரம்

கன்னட நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்த ‘’கே.ஜி.எஃப்.’’ என்ற சினிமா கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளிவந்தது.

ஆம்.

இந்தப்படம் வெளிவந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

நல்ல விமர்சனத்தை பெற்ற இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.

இதனையடுத்து, இதன் இரண்டாம் பாகத்தை ‘’ கே.ஜி.எஃப்.- சேப்டர் 2 ‘’ என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள்.

யஷ் ஹூரோவாக நடிக்கும் இந்த படத்தையும் பிரஷாந்த் நெயில் டைரக்டு செய்கிறார்.

கொரோனாவுக்கு முன்பாகவே, இதன் 90 சதவீத ஷுட்டிங் முடிந்து விட்டது.

ஊரடங்கு காரணமாக தடைபட்ட இதன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தொடங்கியது.

இதில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், ஓய்வு எடுத்து வந்தார்.
நோயின் தாக்கம் குறைந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார்.

கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் பிரஷாந்த் நெயில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘’ கே.ஜி.எஃப்.- சேப்டர் 2’’ ஷுட்டிங் முடிந்துள்ளது. இதில் நடித்துள்ள சஞ்சய் தத், நிஜமாகவே போராளி. திரையரங்குகளி;ல் இந்த படத்தை காணலாம்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்,

-பா.பாரதி.