பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது,

இன்று பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இன்றைய மூன்றாம் ப்ரோமோவில், ‘நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நீங்கள் வாயை திறந்தால் ஒரே கலீஜ் ஆகத்தான் இருக்குது’ என்று சனம்ஷெட்டியிடம் சம்யுக்தா (Samyuktha Karthik) கூற, அதற்கு சனம் ’வாயைத் திறந்தால் கலீஜ் என்று சொல்வது நம்ம மைண்டில் கலீஜ் இருந்தால்தான் வாயில் வரும்’ என்று கூறுகிறார்.

மேலும் கேப்டன்ஷிப் டாஸ்க் குறித்து சனம் ஒரு கேள்வியை கேட்க அதற்கு சம்யுக்தா, ‘அது அவங்கவங்க வளர்ப்பை பொறுத்தது’ என்று கூறுவது சண்டையை இன்னும் அதிகரிக்க வைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..