சென்னை: கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் தர்ஷன் மீது, அவரது காதலியும், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளவருமான  நடிகை சனம் ஷெட்டியின்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தனது புகார்மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனே நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்தமனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அதையடுதது, மனு மீது காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.  இலங்கையை சேர்ந்த தர்ஷன். பிக்பாஸ்3  நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார்.

நடிகை ஷனம்ஷெட்டி, தமிழில் அம்புலி, மாயாவி, கதம் கதம் உட்பட சில படங்களில் நடத்தவர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர்தான்  தமிழகத்தில் அறிமுகம் இல்லாத தர்ஷனை,  பிக்பாஸ் வரை கொண்டு சென்றவர்  என கூறப்பட்டது.

காதலர்களான இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஷனம் குறித்து தர்ஷன் கூறிய தகவல், அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. அதுகுறித்து,   கண்ணீர் மல்க,  வீடியோ வெளியிட்ட ஷனம்,  ‘என்னால்தான் தர்ஷனுக்கு சிக்கல் என்றால், இனி அவரிடமிருந்து விலகி விடுகிறேன். ஆனாலும் அவரை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். அது எப்போதும் தொடரும்’ என்று அழுதபடி தெரிவித்திருந்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். இருவரும் சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ பட ஷோவுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இந்நிலையில், கமல் பட நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் தர்ஷனின் நடவடிக்கைகள் மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் நடிகை சனம்ஷெட்டி அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அந்த புகாரின் பேரில் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்தநிலையில்,  நடிகை சனம் ஷெட்டி தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ்போட்டியில் பங்கேற்றுள்ளார்.  இதனால், இருவருக்கும் இடையேயான  பிரச்னை முடிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  ஷனம் தரப்பில் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சனம் மீது தாக்குதல் நடத்திய தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடக்கோரி  மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.