ஹாக்கி உலகக் கோப்பை: மணல் சிற்பத்துடன் வரவேற்கும் ஒடிசா

ஒடிசாவில் நடைபெற உள்ள ஹாக்கி உலக கோப்பை போட்டிக்கு அனைவரையும் வரவேற்கும் விதமாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

sudarsan

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வடிப்பதில் வல்லவர். இவர் மக்கள் போற்றும் தலைவர்களின் பிறந்த நாள், மறைவு, சாதனைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை மணல் சிற்பமாக வடிப்பதில் கைத்தேர்ந்தவர். இவரின் சிற்பக்கலைக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

ஒடிசாவில் உலக ஹாக்கி போட்டி நடந்து நடைபெற உள்ளது. இதனை குறிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக் ஒரு மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார். ஒடிசாவின் பண்டைய கடல்வழி போக்குவரத்தை குறிக்கும் வகையில் படகு சிற்பம் ஒன்றை வடிவமைத்து அதன் மேல் உலக ஹக்கி தொடர் தொடங்க உள்ளதை சுதர்சன் பொறித்துள்ளார்.

தனது சிற்பத்தை புகைப்படம் எடுத்த சுதர்சன் டிவிட்டரில் பதிவிட்டு ஹாக்கி தொடருக்கு அனைவரையும் வரவேற்துள்ளார்.