மணல் சிற்பம் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை பெருமைப்படுத்திய சிற்ப கலைஞர்!

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணிகளை வாழ்த்தி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

Sand_art_to_cheer

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளிடையே நடைபெற்றது.

இந்தியாவில் நடைபெறும் இந்த ஹாக்கி தொடரை பெருமைப்படுத்தும் விதமாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து- பெல்ஜியம், ஆஸ்திரேலிய-நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கொடிகளுடன் கூடிய அழகான மணல்சிற்பத்தை சுதர்சனன் வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஹாக்கி போட்டி தொடங்குவதை குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை மணல் சிற்பம் மூலம் சுதர்சதனன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.