விநாயகர் சதுர்த்தி: பசுமையை வலியுறுத்தி கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிற்பம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா கடற்கரையில் பசுமையை வலியுறுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் மணல் சிற்பம் பார்ப்போரை கவர்ந்து வருகிறது. பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் விநாயகர் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

ganesh

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விதவிதமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஒடிசானை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயகர், பூரி கடற்கரையில் விநாயக்ர் சிலையை மணலில் உருவாக்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, பசுமையை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 20 அடி விநாயகர் சிலையை பட்நாயக் வடிவமைத்துள்ளார்.

படுத்த நிலையில் விநாயகர் சிலையை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்போம் என மண்ணில் எழுதி வைத்துள்ளார் பட்நாயக். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் சிற்பத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

கார்ட்டூன் கேலரி