உத்தரபிரதேசம்: வீடுகளுக்குள் மணல் லாரி புகுந்து 6 பேர் பலி

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் அருகே 2வது தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி ஒன்று இன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் அங்கு இருந்த ஒரு வீட்டுகளுக்குள் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may have missed