விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை….!

கன்னடத் திரைத்துறையில் போதை மருந்து கும்பல் குறித்து விசாரித்து வரும் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ஆதித்யா அல்வா மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் அல்வாவின் மகன்.

போதை மருந்து தொடர்பாக நடிகை ராகினி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது முதலே ஆதித்யா தலைமறைவாகிவிட்டார்.

ஆதித்யாவுக்குச் சொந்தமான ரிசார்ட்டுகளில் தற்போது சோதனை நடந்து வருகின்றது.

கார்ட்டூன் கேலரி