டில்லி: 

ணுக்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இந்திய நீச்சல் வீரர் சந்தீப் சேஜ்வால் 2018ம் ஆண்டிற்கான ஆசியப் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

காமன்வெல்த் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னால் கடந்த பிப்ரபவரி மாதம் சந்தீப் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அப்போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. 30வயதான சந்தீப் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் முழுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை.  ஆனாலும் தொடர்ந்து பயிற்சிகள்  செய்துவருகிறார். முழுமையான பயிற்சியில் ஈடுபட்டு ஆசிய போட்டியில் வெற்றிப்பெறும் முனைப்போடு சந்தீப்  தயாராகி வருகிறார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 100மீ breaststroke  பிரிவில் போட்டியிட்ட  சந்தீப் ஆறாவது இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பப்பட்ட அவர்  தோல்வியை சந்தித்தார்.

வேகமாக உடற்பயிற்சியில் முன்னேறி வரும் சந்தீப் ஆசிய போட்டியில் வெற்றிப்பெற முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். காமன் வெல்த் போட்டியில் ஏமாற்றத்தை தந்த சந்தீப் நம்பிக்கையுடன் மீண்டும் பயிற்சி செய்து வருகிறார்.