சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர்…!

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’கபீர் சிங்’ படத்தைத் தயாரித்த பூஷன் குமாருக்கு இப்படத்தின் கதை பிடித்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பிரம்மஸ்திரா’, ’ஷம்ஷேரா’ படங்களின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சந்தீப் வாங்காவின் புதிய படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.