சாண்டியின் நான்காவது டான்ஸ் ஸ்கூல் திறப்பு விழா…!

பிக் பாஸ் சீசன் 3 க்கு பின் அதிகமாக பேசப்பட்டவர் சாண்டி மாஸ்டர் . ஹவுஸ் மேட் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் சாண்டி .

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர்களை பற்றிய தகவல் அதிகம் வெளி வரவில்லை. இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவின் தங்கை பிறந்தநாளை சாண்டி காட்டுப்பாக்கத்தில் இருக்கும் தனது டான்ஸ் ஸ்டுடியோவில் கொண்டாடியுள்ளனர் . இது அவரின் நான்காவது டான்ஸ் ஸ்கூல் திறப்பு விழாவும் கூட .

இதில் பிக் பாஸ் பிரபலங்கள் தர்ஷன் , ஷெரின் , ரேஷ்மா , சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினர் .

சனம் ஷெட்டி விவகாரத்துக்கு பின் தர்ஷன் கலந்து கொள்ளும் விழாவே இது தான் . அதிலும் ஷெரின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .