தந்தையர் தினத்திற்காக சாண்டி மாஸ்டர் இயற்றிய லாலாவுக்கான பாடல்….!

கலா மாஸ்டரிடம் மாணவனாக அறிமுகமாகி கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான சாண்டி மாஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார் .

பிக் பாஸ் சீசன் 3 க்கு பின் அதிகமாக பேசப்பட்டவர் சாண்டி மாஸ்டர் . ஹவுஸ் மேட் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் சாண்டி .

பிக் பாஸ் மூலம் சாண்டி மாஸ்டர் மட்டுமில்லை அவரது செல்ல மகள் லாலாவும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் .

இந்நிலையில் தந்தையர் தினத்திற்காக சாண்டி மாஸ்டர் லாலாவுக்கான பாடல் ஒன்றை இயற்றி படம்பிடித்துள்ளார் .