‘சங்கமித்ரா’ இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் முதல் தமிழ் படம்! 

ந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட இருக்கும் தமிழ்படம் சங்கமித்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கப்பட இருக்கிறது.

தேனாண்டாள்  பிலிம் தயாரிக்கும் 100வது படம் சங்கமித்ரா. இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல தமிழ்ப்பட இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகரான ஜெயம்ரவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் நடிகர் நடிகைகள் தேர்வு  நடைபெற்று வருகிறது.

சங்கமித்ரா  படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கப்பட இருக்கிறது. பின்னர் இது மற்ற இந்திய மொழிகளான போஜ்புரி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாபெரும் பட்ஜெட் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன்  ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சுதீப் சாட்ர்ஜி ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டராக சாபு சிரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிராபிக்ஸ் பணிகளுக்காக கமலகண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, டென்மார்க், யுகே, நியூசிலாந்து உள்பட 11 நாடுகளில் நடைபெற இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெல்போர்ன் சென்றிருந்த  குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி யுடன் சென்று லேகேசன்களை பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.