விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

இப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று அறிவித்த நிலையில் நவம்பர் 8 அல்லது நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்தப் படத்தின் திரையிடும் தேதி பலமுறை மாற்றப்பட்டு நேற்று வெளியாகும் என இறுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் விநியோகஸ்தர்களுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் ‘சங்கத்தமிழன்’ வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் நேற்று மாலை 6 மணி காட்சி பல இடங்களில் திரையிடப்பட்டதாக விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று காலைக் காட்சி முதல், படம் திரையிடப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.