[embedyt] https://www.youtube.com/watch?v=j769J4kXsBk[/embedyt]

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றள்ள அழகு அழகு என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.