விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’இன்று திரைக்கு வரவில்லை…!

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

இப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று அறிவித்த நிலையில் இந்தப் படம் வருகின்ற நவம்பர் 8 அல்லது நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்தப் படத்தின் திரையிடும் தேதி பலமுறை மாற்றப்பட்டு இன்று வெளியாகும் என இறுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் விநியோகஸ்தர்களுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் ‘சங்கத்தமிழன்’ வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.