இறுதிக்கட்டத்தை எட்டும் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படப்பிடிப்பு …!

விஜய் சந்தர், இயக்கத்தில் தற்போது இயக்கிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.இதில் சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு, விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி மியூஸிக் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதியும் வில்லனும் மோதும் சண்டைக் காட்சியை இங்கு படமாக்கி வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nivetha pethuraj, rashi kanna, Sanga tamilan, vijay sethupathi!
-=-