‘தமிழரசன்’ மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா…!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை சங்கீதா மீண்டும் திரையில் நடிக்கவிருக்கிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்த சங்கீதா தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.