வயதான காலத்தில் தன்னை வீட்டை விட்டு வெளியேற சொன்னதாக சங்கீதா மீது அவர் தாயார் புகார் …!

நடிகை சங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையம் சங்கீதாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது . இரு தினங்களுக்கு முன் கணவர் கிரிஷுடன் மகளிர் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.

தயாரிப்பாளர் கே.ஆர்.பாலனின் பொண்ணுதான் சங்கீதாவின் தாயார் பானுமதி. சென்னை வளசரவாக்கத்தில் தன் மாமனார் வீட்டு வழியில வந்த சொத்து தான் இப்போ பானுமதி.அம்மா வசிக்கும் வீடு என தகவல் , பானுமதி தரை தளத்துலயும் நடிகை சங்கீதா மாடியிலயும் குடியுள்ளனர். ஆனால் அந்த வீடு சங்கீதாவின் பெயரில் உள்ளதாம்.

அந்த வீட்டை தன் அம்மாவின் துணையுடன் தன் சகோதரர்கள் அபகரித்து விடுவார்கள் எனும் பயத்தில் தன் தாய் பானுமதியை வீட்டை விட்டு வெளியேற சங்கீதா சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என தாய் பானுமதி புகார் அளித்துள்ளார் .