டெல்லி: சங் பரிவார்  அமைப்புகளிடம் இருந்து ஏராளாமான கொலை மிரட்டல்கள் வருவதாக பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை ஆணையர், சிறந்த வழக்கறிஞர் என்று அறியப்பட்டவர் ராஜீவ் தவான். பாபர் மசூதி வழக்கில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்றவர். அந்த வழக்கின் தீர்ப்பும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி விட்டது.

இந் நிலையில், சங் பரிவார் அமைப்புகளால் தமது உயிருக்கு ஆபத்து என்று அவர் பரபரப்பை குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது:

நாட்டில் நிலவும் அமைதியான சூழலை இஸ்லாமியர்கள் ஒருபோது கெடுத்தது கிடையாது. ஆனால் இந்துக்கள் அவ்வாறு செய்கின்றனர். பாபர் மசூதி வழக்கில் வன்முறையில் இறங்கிய இந்துக்கள் என்று இங்கு பொருள் கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் அவர்களை (இந்துக்கள்) இந்து தாலிபான்கள் என்றே அழைத்து இருக்கிறேன். அந்த கருத்தில் இருந்து நான் பின்வாங்க போவது இல்லை. 1934ம் ஆண்டு மசூதியை பாதுகாக்க இஸ்லாமியர்கள் முயன்றனர்.

1949ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டது. 1950-52 ஆண்டுவாக்கில் அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் இந்துக்கள் பின்பற்றவே இல்லை. அதன் பிறகு மிக மோசமானது என்றால் அது பாபர் மசூதி இடிப்பு.

பாபர் மசூதி தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து வன்முறைகளே, இந்து வன்முறையே என்று நான் திரும்ப, திரும்ப சொல்கிறேன். இந்த விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றம் அந்த அநீதியை திரும்ப பெறவில்லை என்றால், அது நீதியாக இருக்காது. மறு சீராய்வு மனு என்பது சன்னி வக்பு வாரியத்தின் விருப்பம். அதை செய்யுமாறு, அவர்களுக்கு நான் அறிவுரை கூற ஒரு காரணம் இருக்கிறது.