கருணாஸ்க்கு நாக்கில் சனி: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

ருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளது என்ற  அமைச்சர் ஜெயக்குமார்,  கருணாஸ் பேச்சு குறித்து ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எனவும்  கேள்வி எழுப்பினார்.

 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது தான் நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடை பெற்றுள்ளது.

அப்போது திமுக கட்சியினரே ஊழல் செய்துவிட்டு தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்”.  “ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையிடமே திமுக தான், ஆனால் தற்போது ஊழல் குறித்து அவர்கள் நியாயம் பேசி வருகின்றனர்.

தமிழக மின்துறை ஊழல் தொடர்பாக ஸ்டாலின் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்டுள்ளார். எங்களுக்கு எதிராக ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் நடிகர் கருணாஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  “கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் விரைவில் சந்திப்பார்.

பிரியாணி கடை தகராறு, விமானத்தில் தகராறு என ஓடி ஓடி பஞ்சாயத்து செய்யும் ஸ்டாலின் இந்த விவகாம் குறித்து இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட்டில் இன்று நடைபெறும் ஆய்வு குறித்த கேள்விக்கு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.