சனிப் பெயர்ச்சி 2017 : மகர  ராசிக்கான பலன்கள்

னிப் பெயர்ச்சி 2017 : மகர  ராசிக்கான பலன்கள்

கர ராசிக்காரர்களுக்கு இதுவரை லாபச் சனியாக இருத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை  ஏழரைச்  சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களை தர உள்ளார்.  இருப்பினும் சனி பகவான் நல்ல பலன்களையே தருவார்.

தடைபட்ட காரியங்கள் விரைவில் முடியும். உங்கள் கம்பீரப் பேச்சால் பலரையும் கவர முடியும்.  கணவன் – மனைவி தகராறு நீங்கும்.   சுபச் செலவுகள் அதிகரிக்கும்.   சித்தர் ஆன்மீக வாதிகள் போன்றோரின் நல்லாசி கிடைக்கும்.  வழக்குகள் சாதகாம முடியும்.   இதுபோல பல நல்ல பலன்கள் இருப்பினும்,  யாரிடமும் அதிகப் பழக்கம் வைத்துக் கொள்வது தீமையில் முடியும்..

சனி பகவான் உங்கள் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு திருப்தியாக இருக்கும்.   கடன் வாங்க வேண்டி வரலாம்.  சேமிப்புக்கு வாய்ப்பு குறைவு.  வழக்கு சாதகம், பழைய கடன் அடைதல், சகோதரியின் திருமணம், செல்வாக்கு உயர்தல் ஆகியவைகளுக்கு வாய்ப்பு உண்டு.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு கடுமையான போட்டிகளுக்கு இடையில் சுமாரான லாபம் உண்டு.  அனுபவசாலிகளின் உதவி அவசியம் தேவை.   அயினும் முழுப் பொறுப்பையும் யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது.   மருந்து, கமிஷன் மரம் வர்த்தகம் செய்வோருக்கு லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பலரின் சூழ்ச்சியை முறியடித்தால் வெற்றி கிடைக்கும்.   வேலைச்சுமை மிகவும் அதிகமாக இருக்கும்.   பதவி சம்பள உயர்வுக்கு மிகவும் போராட வேண்டி வரும்..

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் மிகுந்த கவனம் அவசியம்.   விளையாட்டுப் போட்டிகளில் ஓரளவு வெற்றி கிட்டு.

கலைத்துறையினருக்கு உங்களின் முழுத் திறனையும் பயன் படுத்தினால் முன்னேற்றம் உண்டு

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் பழைய பிரச்னைகளில் இருந்து விடுதலை கிட்டும்.

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் அலைச்சலும் செலவுகளும் அதிகமாகும்.   நண்பர்களிடம் விரோதம் வரலாம் எச்சரிக்கை தேவை.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் வசதியான வீட்டுக்கு இட மாற்றம்,  திடீர் பண வரவு, திருமணப் பேச்சில் வெற்றி, குழந்தை பாக்கியம் ஆகியவைகளுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  வழக்கில் திருப்பம் உண்டாகும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் பிரபலங்களின் நட்புக்கும் வெளிநாட்டுப் பயணத்துக்கும் வாய்ப்புண்டு.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில்  சொத்து வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால்  செலவுகள் கடுமையாகும்.  தாய் வழி உறவினர்களுடன் பகை வரக்கூடும்…

பரிகாரம் : விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் வாலீஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரனை வழிபட்டு  வர வேண்டும்.