Random image

சனிப்பெயர்ச்சி பலன்கள்2020-23: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… வேதாகோபாலன்

சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியால மிக அதிக நன்மையடையப்போகிறவர்கள், ரிஷபம் (ஏனெனில் பாக்கியாதிபதி பலம் பெறுகிறார் மற்றும் அஷ்டம சனி விலகுகிறார்), விருச்சிகம் (ஏனெனில் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), கன்னி (ஏனெனில் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறார்கள்), சிம்மம் (ஏனெனில் சனி மறைவிடத்தில் அமர்கிறார்), மீனம் (ஏனெனில் லாபஸ்தானத்துக்கு வருகிறார்).

சற்று ஜாக்கிரதையாய் இருந்து பரிகாரங்களை கவனத்துடன் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மிதுனம் (ஏனெனில் அஷ்டம சனி), துலாம் (ஏனெனில் அர்தாஷ்டம சனி), மகரம் (ஏனெனில் ஜென்மசனி), கும்பம் (புதிதாக ஏழரைச்சனி துவங்கவிருக்கிறது).

சனிபகவான் நீதிமான் என்பதை நீங்க அறிவீங்க. சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று  யாரும் பயப்பட வேண்டாம். அவர் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார்.  தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். சிலருக்கு அனுபவப் படிப்பினைகளை கொடுத்து செம்மைப்படுத்தி வாழ்வில் உயர்த்துவார் சனிபகவான்.

மேலும் தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பயப்பட தேவையில்லை. சனி ஆட்சி பலம் பெறுவதால், உழைப்போருக்கு உயர்வு ஏற்படும்.  அந்நிய மொழி பேசும் நாடுகளில் உள்ளோர் அதிக நற்பலன் பெறுவர். இரும்பு, எண்ணை, வாகனங்கள் போன்ற துறைகள் வளம் பெறும். ஊழியம் செய்வோரும் உழைப்போரும் உயர்வு  பெறுவர்.

சனி பகவானுக்கான பரிகாரங்கள் (பிரீதிகள்) : எள் தீபம் ஏற்றுதல், காகத்துக்கு தினமும் சாதம் வைத்தல். இரும்பு விளக்கில் நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றுதல், கருப்பு நாய்க்கு உணவு படைத்தல், ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், நீல நிறப் பொருட்கள் மற்றும் உடைகளை தானம் செய்தல், எள்ளால் செய்த இனிப்பு விநியோகம் செய்தல், திருநள்ளாறு, குச்சனூர் சென்று வழிபடுதல், சனிக்கிழமைதோரும் அனுமனுக்கு விளக்கேற்றி, அர்ச்சனை செய்து மாலை சாற்றி வெள்ளை சாற்றி வழிபடுதல் அனுமான் சாலீசா சொல்லுதல் ஆகியவை சிறந்த சனிப்ரீதிகள் ஆகும்.

துலாம்

சித்திரை, 3,4: சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீங்க. மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீங்க. எதிலும் ஒரு நிதானப்போக்கு இருந்தாலும் முடிவில் நன்மைதான் விளையும்.  னை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.

சுவாதி: பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீங்க. குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீங்க. உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவாங்க.

விசாகம் 1,2,3: பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கிடுங்க. குடும்பத்தில் ஒருவருக்கு, சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீங்க. அதற்கான சம்பளமும் உயரும். சில பணிகளை அநாயாசமாக முடிப்பீங்க.

விருச்சிகம்

விசாகம்,4: வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். வியாபாரிகளுக்குத் தொழில் நல்லபடியாக நடக்கும். ஆர்டர்கள் நிறைய கிடைத்து மேன்மை அடைவீங்க. சகோதர – சகோதரிகள் வழியில் உங்களுக்குச் செலவுகள் இருக்கலாம். வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும்.

அனுஷம்: புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

 கேட்டை: விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீங்க. கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். மாணவர்கள் முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீங்க. ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பாங்க. கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீங்க. வருமானம் உயரும்.

தனுசு

மூலம்:. இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும். வீடு, வாகனம், உயர்கல்வி போன்ற விஷயங்களில் சில எதிர்மறை பலன்களும், சாதகமற்ற நிலைகளும் இருக்கும். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் வரும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வரும் என்றாலும் பிரச்னைகள் தீவிரமாகாது.

பூராடம்: திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்குத் திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு, இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக தொடங்கும். பங்குச் சந்தை விவகாரங்களில் கவனமாக இருங்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் துறைகளில் முதலீடு செய்யவேண்டாம். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கணுங்க. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

உத்திராடம்,1: எண்ணத்தில் தடுமாற்றம் உண்டாகி தவறான முடிவு எடுக்க வாய்ப்பு உண்டு; கவனம் தேவை. குறிப்பாக பண விவகாரங்களில் கவனமாக இருங்கள். அடுத்தவர் கடனுக்குப் பொறுப்பேற்பதும் இப்போது வேண்டாம். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, மிதமான நற்பலன்களைத் தரும். கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நாளை மகரம், கும்பம், மீனம்  ராசிகளுக்கான பலன்கள்