சனிப் பெயர்ச்சி 2017 : கடக ராசிக்கான பலன்கள்

னிப் பெயர்ச்சி 2017 : கடக ராசிக்கான பலன்கள்

டக ராசிக்காரர்களுக்கு இதுவரை 5ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 6ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இவர் விபரீத ராஜ யோகத்தை தருபவர்  என்பதால் தடுமாற்றங்கள் நீங்கி வாழ்க்கை வளமாக நல்ல வாய்ப்புண்டு.

குழந்தைப் பேறு, வாழ்க்கைத் துணயின் உதவி, மகளின் விமரிசையான திருமணம்,  ஒதுக்கி வைத்த உறவினர் மீண்டும் வந்து சேருதல், சொந்த வீடு அமைவது, ஆகியவை நடைபெறும்.  பழைய கடன்களை சுலபமாக தீர்ப்பீர்கள்

சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டை  பார்ப்பதால் தைரியமாக  நீங்கள் பல முக்கிய முடிவுகள் எடுக்கலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம்.  வராது என நினைத்த பணம் திரும்பக் கிடைக்கும்.   ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்க மிகுந்த வாய்ப்பு உண்டு.

வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள்.  பாக்கித் தொகை வசூல், புதிய ஒப்பந்தங்கள்,  சங்கத்தில் பெரிய பொறுப்பு ஆகியவைகளுக்கு வாய்ப்புண்டு.    கூட்டுத் தொழிலும் நன்மையை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலையான வேல வாய்ப்பு,  சம்பள உயர்வு,  மேலதிகாரிகளுடன் நல்லுறவு,  சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகியவைகள் நிகழும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் கடுமையாக உழைத்துப் படியுங்கள்.  உங்களுக்கு இப்போது முதலிடம் கிடைக்க பெரிதும் வாய்ப்புக்கள் உண்டு.

கலைத்துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்புக்கள் பெரும் புகழைத் தரும்.

இந்த சனிப்பெயர்ச்சி இவ்வளவு நாள் சோர்ந்து கிடந்த உங்களை முன்னுக்கு அழைத்துச் செல்லும்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் பணவரவு அதிகரிப்பு,  வீடு மற்றும் மனைகள் மூலம் லாபம், குடும்பத்தில் மதிப்பு அதிகரிப்பு ஆகிய பலன்கள் உண்டு.  புனர்பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தோர்க்கு மேலும் நற்பயன் உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் முன்பு பாதியிலேயே நிறுத்திய வேலைகள் சுலபமாக முடியும்.  வீடு மாறுவது, வாகனம் வாங்குவது போன்ற பல நற்பயன்கள் கிட்டும்.  பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் நடக்கும்

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  பேச்சில் கம்பீரம் அதிகரிப்பு, உடல் ஆரோக்ய முன்னேற்றம் போன்ற பல நல்லவை நடைபெறும்.  பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,  வீடு வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் பணத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் உடல் நலக்குறைவும் ஏமாற்றங்களும் வரும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் வாகனம் ஓட்டும் போது விபத்துக்கள் நேரிடலாம்.  மிகுந்த கவனம் தேவை…

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் நேரம் சரி இல்லை.  பணப் பற்றாக்குறை, வீண் பழி,  பழைய பிரச்னைகளால் மன வருத்தம் ஆகியவைகளுக்கு வாய்ப்புண்டு .

பரிகாரம் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக் காட்டில் உள்ள ஸ்ரீ பொங்கு சனீஸ்வரனை   வழிபட்டு  வர வேண்டும்