ஓய்வுக்குப் பிறகான முதல் டென்னிஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்ஸா..!

--

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

சானியா மிர்ஸா, இரண்டாண்டுகள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் என்ட்ரி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி களமிறங்கிய முதல் சர்வதேச தொடரிலேயே, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதானது அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் ச‍ெய்துள்ளது.

உக்ரைன் நாட்டின் நாடியாவுடன் சேர்ந்து, மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி, சீனாவின் ஷுவாய் ஸாங் – ஷுவாய் பெங் இணையை எதிர்கொண்டனர்.

இதில், 6-4 மற்றும் 6-4 என்ற நேர்செட்களில் சீன ஜோடியை வென்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது சானியா மிர்ஸா – நாடியா இணை.