சனிப் பெயர்ச்சி 2017 : கன்னி ராசிக்கான பலன்கள்

னிப் பெயர்ச்சி 2017 : கன்னி ராசிக்கான பலன்கள்

ன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டம சனியாக அமரிகிறார்.  இதனால் மன அலைச்சலும் தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகரிக்கும்.   எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் தேவைப்படும்

யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்கக் கூடாது.  வீடு வாங்குவது, சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.  கடன் வாங்குவதை அதிகம் தவிர்க்கவும்.  தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.  வழக்கில் தீர்ப்பு வர மிகவும் தாமதமாகும்   விலையுயர்ந்த பொருட்களை யாரிடமும் இரவல் வாங்குவதோ,  இரவல் கொடுப்பதோ கூடாது.   வீடு கட்டுவோர் உரிய அனுமதி முன்கூட்டியே பெற்றிருந்தால் மட்டும் கட்ட ஆரம்பிக்கலாம்.

சனி பகவான் உங்களின் ராசியை  பார்ப்பதால் சோர்வு மிகவும் தலை தூக்கும்.    பண வரவு அருமையாக இருக்கும்.   மறைமுக எதிரிகளை விலக்கி வைப்பீர்கள்.  உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரிகளுக்கு போட்டிகள் மிகவும் கடுமையாகும்.   கடன் கொடுப்பதை முழுவதுமாக நிறுத்தவும்.    அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகலாம்.   பங்குதாரர்களிடம் கருத்து மோதல் வரலாம்.   பணியாட்களை மிகவும் நம்ப வேண்டாம்.  எலெக்ட்ரானிக்ஸ், மூலிகை வகைகள், கணினி ஆகியவை வியாபாரம் செய்வோருக்கு நல்ல பலன்கள் உண்டு

உத்தியோகஸ்தர்களுக்கு பலரின் சூழ்ச்சிகளுக்கிடையே முன்னேற்றம் காணப்படும்.  மேலதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை.  ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் ஏற்படக் கூடும்.  முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும்.   பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு மிகவும் கடுமையாக உழைக்க நேரிடும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

கலைத்துறையினருக்கு வேற்று மொழியினரால் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கான பெரிய படிப்பினையை பெறுவீர்கள்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும்.  சமூகத்தில் அந்தஸ்து உயர்வு, தங்க நகைகள் சேர்வது ஆகியவைக்கு வாய்ப்புண்டு.  அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் அனுசரித்துப் போக வேண்டும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் பண வரவு அதிகரிப்பு, காரியம் கை கூடுதல்,  குடும்பத்தில் அமைதி ஆகியவைகளுக்கு வாய்ப்புண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு கோபம் அதிகரிக்கும் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  அரைகுறையா நிறுத்தப் பட்ட கட்டுமான வேலைகளை எளிதாக முடிக்கலாம்.   சொத்து பிரச்னை உங்கள் பக்கம் முடியும் வாய்ப்புண்டு.  உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் பேசும் போது கவனம் தேவை..

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் பிள்ளைகளின் மீது கவனம் தேவை.  விலையுயர்ந்த பொருட்கள் களவு போகலாம்.  கவனம் தேவை.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் தனியாக எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் வாகனத்தில் செல்லும் போதும் தாயார் உடல்நிலையிலும் மிகுந்த அக்கறை தேவை.

பரிகாரம் : திருவாதிரை நட்சத்திரத்தன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமணலியில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரருக்கு வில்வம் சாற்றி  வழிபட்டு  வர வேண்டும்.