Random image

சனிப் பெயர்ச்சி 2017 : சிம்ம ராசிக்கான பலன்கள்

னிப் பெயர்ச்சி 2017 : சிம்ம ராசிக்கான பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை 4ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 5ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இனி உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.  தாயின் ஆரோக்கியம் மேம்படுதல்,  சொத்து பிரச்னை சாதகமாக முடிவடைதல், பாதியில் நிற்கும் கட்டுமானப் பணி விரைவில் முடிவடைதல், பணவரவு அதிகரிப்பு போன்ற நற்பயன்கள் ஏற்படும்.

குழந்தைப் பேறு, கணவன் – மனைவி அன்னியோன்னியம் அதிகரிப்பு,, ஆகியவை நடைபெறும்.  பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசவும்.    தொலைதூரப் பயணங்களை குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்

சனி பகவான் உங்களின் இரண்டாம் வீட்டை  பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேச வேண்டும்.   கண்களில் கவனம் தேவை.    உறுதிமொழி தரும் முன் யோசித்து தரவும்.    வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.    பண வசதி அருமையாக இருக்கும்.   வாகன யோகம் உண்டு.

வியாபாரிகளுக்கு பற்று வரவு உயர்வு, புதிய பங்குதாரர்கள் அறிமுகம்,  விற்பனை அதிகரிப்பு ஆகியவைகள் நடக்கும்.   வி ஐ பி க்கள் அறிமுகத்தால் நல்ல பலன் உண்டு.   ஏற்றுமதி இறக்குமதி, ஏஜன்சி,  புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரினங்கள் ஆகிய வர்த்தகம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை குறைந்து உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.   சம்பள உயர்வு,  விரும்பிய இடத்துக்கு இட மாற்றம் ஆகியவைகளுக்கு மிகுந்த வாய்ப்புண்டு.   வெளிநாடு வேலை வாய்ப்பு சிலருக்கு அமையக்கூடும்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் உயர்கல்வியில் வெற்றி பெருவார்கள்.  ஆசிரியர் உங்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவார்கள்.   விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் உண்டு

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புக்கள் கிடைத்து பெரும் புகழைத் தரும்.

இந்த சனிப்பெயர்ச்சி இவ்வளவு நாள் குழம்பிக் கிடந்த உங்களை முழுவதுமாக முன்னேற்றம் காண வைக்கும்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் சொத்து சேர்க்கை ,  வீடு விரிவாக்கம், புதிய தங்க நகைகள் வாங்குவது ஆகியவை நிகழும்.  மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் கவனம் தேவை..  பூரம், உத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்..

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் புதிய சொத்துக்கள் வாங்கும் ஆசைகள் நிறைவேறும்.   பூரம் நட்சத்திரத்தில் உள்ளவர்கள் பிடிவாதத்தை முழுவதும் கை விட வேண்டும்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  பிரபலங்களின் நெருக்கம் அதிகரிக்கும்.   கௌரவ பதவிகள் தேடி வர வாய்ப்புண்டு.   வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.  மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதி காப்பது நல்லது.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் கடன் பிரச்னை அதிகரிப்பு, சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை..

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் வீண் செலவுகள், அலைச்சல், வேலைகள் இழுபறி ஆகியவை நிகழும்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் செல்வாக்கும், புகழும் கூடும்.  பழைய கடன்களை தீர்க்க வாய்ப்புண்டு .

பரிகாரம் : ஏகாதசி தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோகத்தூரில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாரையும் நெய்தீபம் ஏற்றி  வழிபட்டு  வர வேண்டும்.