சனிப் பெயர்ச்சி 2017 : விருச்சிகம்  ராசிக்கான பலன்கள்

னிப் பெயர்ச்சி 2017 : விருச்சிகம்  ராசிக்கான பலன்கள்

விருச்சிக  ராசிக்காரர்களுக்கு இதுவரை ஜெனமச் சனியாக படுத்தி வைத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை  பாத சனியாக அமர்ந்து பலன்களை தர உள்ளார்.  பணப்புழக்கம் அதிகரித்தல், யோசித்து செயல்படுதல், தெளிவான சிந்தனை ஆகியவற்றுடன் பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

அவமானப்படுத்தியவர்கள் தற்போது வலிய வந்து பேசுவார்கள்.   அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை கிடைக்கும் யோகம் உண்டு.  உணவுக் கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் கைவிட வேண்டாம்.  குடும்ப உறவு பலப்படும்.  பார்வைக் கோளாறு, பல் நோய்கள், சாலை விபத்து ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.  அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் தடை படலாம்.

சனி பகவான் உங்கள் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரிப்பு, எந்த காரியமும் உடனடியாக முடியாமை திடீர் பயணங்கள் ஆகியவை நேரிடும்.  உடல்நலத்தில் கவனம் தேவை.  திடிர் பண வரவு, வீடு, மனை, வாகன யோகங்கள் நிகழும்

வியாபாரிகளுக்கு வியாபாரம் விரிவடையும் கொடுக்கல் வாங்களில் கஷ்டம் இராது.   வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  கடைகளை நவீனப் படுத்துதல்.  பெரிய நிறுவனங்களுடன் ஒப்ப்பந்தம், விளம்பர யுக்திகள் ஆகியவற்றால் லாபம் அடைவீர்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லாது சுமுகமாக அனைத்தும் நடக்கும்.  உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் நல்ல ஆர்வம் பிறக்கும்.  விரும்பிய உயர்கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் நீங்கள் நல்ல அந்தஸ்தை பெறுவீர்கள்..

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு வீண் அலைச்சலும் வீண் செலவுகளும் ஏற்படும்.  விசாகம், கேட்டையில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிப்பு, பயணங்களால் ஆதாயம் ஆகியவை நிகழும்

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் தள்ளிப்போன திருமணம் நன்கு நடக்கும்.  கடன் தொல்லை தீரும்.  பழைய வீட்டை சரி செய்வீர்கள்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில்  எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் பால்ய நண்பர்களால் நன்மைகள் நிகழும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்யும் பலன் கிட்டும்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் வழக்குகள் சுலபத்தில் முடியாது.  எதிலும் கவனம் தேவை..

பரிகாரம் : திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரையும் அருகில் உள்ள யமனையும் வழிபட்டு  வர வேண்டும்.