டெல்லி: கோவிட் 19 எதிரொலியாக, புதிய சுகாதார வழிமுறைகளை தமது ஓட்டல்களில் பயன்படுத்த போவதாக அறிவித்து இருக்கிறது ஓயோ.
அதன்படி ஹோட்டல்களில் சுகாதாரம் மற்றும் சுகாதார சோதனைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளது, மேலும் இவற்றைக் கொண்ட ஹோட்டல்களில் ‘சுத்திகரிக்கப்பட்ட தங்குமிடங்கள்’என்ற வார்த்தை  பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஓயோவானது இந்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாட்களுக்குள் 1,000 ஹோட்டல்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. லாக்டவுன்  தளர்த்தப்படும்போது, ​​18,000 ஹோட்டல்களிலும் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்யும் போது, காலி செய்யும் போதும் இந்த குறைந்தபட்ச தொடுசெயல் முறையை கையாளப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் ரோஹித் கபூர் கூறுகையில், வாடிக்கையாளின் விருந்தோம்பல் முறையில் சுகாதாரம், பாதுகாப்பு சோதனைகள், குறைந்த பட்ச தொடு செயல்முறைகளை, மாற்றங்களை விரைவில் காணலாம். எங்களின் விருந்தினர்கள் தான் எங்களின் முன்னுரிமை என்றார்.
ஒவ்வொரு குறிப்பிட்ட மணி நேர இடைவெளியில் விருந்தினர்களை வரவேற்பது, உடல்நலம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை பராமரிப்பதில் நாங்கள் அக்கறையுடன் பணியாற்றி வருகிறோம். அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.