பார்ட்டியில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினாரா சஞ்சனா கல்ராணி.?

 

 

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவரும் நடிகையாக வளம் வருபவர் தான்.

‘பாக்ஸர்’ ‘போடா முண்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த விருந்தொன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, தயாரிப்பாளர் வந்தானா ஜெயினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பீர் பாட்டில் ஒன்றின் மூலம் அவரை தாக்கியதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன நடந்தது என்பது தொடர்பாக விளக்கம் ஒன்றை கடிதமாகத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் சஞ்சனா கல்ராணி.

சுற்றிக்கொண்டிருக்கும் தகவல்கள் எல்லாம் அடிப்படையில்லாத வதந்திகளே.என் அம்மாவையும் என் குடும்பத்தையும் மோசமான வார்த்தைகளால் ஏசினார் என்னைக் கைது செய்து, என் திரை வாழ்க்கையை முடக்கி, என் பெயரைக் கெடுத்து, என்னை சிறையில் அடைத்து, என் மொத்த குடும்பத்தையும் முடித்துவிடுவதாக மிரட்டினார்.

நான் இந்த சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டு, அவதூறு பேசப்பட்டு, இலக்காக்கப்பட்டுள்ளேன்.

அந்தப் பெண் எனது மொபைலைப் பறித்து என்னை முரட்டுத்தனமாக நடத்தி, என் கையை முறுக்கி இருக்கும் வீடியோவே ஒரு ஆதாரம். விஸ்கி பாட்டில் உடைக்கப்பட்டிருந்தால் அதற்கான அறிகுறி, இரத்தக் கறை இருக்காதா?

இந்தப் பெண், இந்தியக் கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டியவர். அவர் மறுத்தபோது அவரை பற்றி அவதூறு பேசி, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கச் செய்து பணத்தையும் பிடுங்கிக் கொண்டார்.

ஆதாரமில்லாத எந்த செய்தியையும் உங்கள் ஊடகங்களில் கொண்டு வராதீர்கள். எனக்கு இந்த முக்கியமான நேரத்தில் ஆதரவு தந்த பெங்களூரு காவல்துறைக்கு நன்றி என கூறியுள்ளார் .

ஆதாரமில்லாத எந்த செய்தியையும் உங்கள் ஊடகங்களில் கொண்டு வராதீர் : சஞ்சனா கல்ராணி