விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராமர் . இவர் பெண் வேடமணிந்து பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது.

அதே போல ஆத்தாடி என்ன உடம்பீ என்ற பாடலால் இவர் பெருமளவில் ஹிட் ஆனார்.

இந்நிலையில் அவர் தற்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். சூப்பர் டாக்கீஸ் அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மணி ராம் இயக்கத்தில் , ஐபிஸ் கே.தினேஷ் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகவுள்ளது இதற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கவுள்ளார்.

மேலும் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்க உள்ளார். மேலும் இதன் பூஜை மிக சிறப்பாக சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.