சிறுவயது ஞாபகத்தில் தென்னை மரத்தில் ஏறிய பிரபல நடிகை. சஞ்சனா சிங்..

வர்ச்சி, குணசித்ர நடிகை சஞ்சனா சிங். அஞ்சான், விஞ்ஞானி, தனி ஒருவன், ரகளபுரம், வெற்றி செல்வன் பொன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கி இருந்த 5 மாத காலத்தில் தினமும் ஒரு வீடியோ என்று சமூக வலை தளத்தில் வெளியிட்டு வந்தார்.


இந்நிலையில் சேலம் அருகே உள்ள தனது மேனேஜரின் கிரமத்துக்கு சென்றார் சஞ்சனா சிங். அங்கிருக்கும் தென்னந் தோப்புக்கு சென்றவர் மரம் ஏற ரெடியானார். தனது துப்பட்டாவை கயிறுபோல் செய்து காலில் கட்டிக் கொண்டு தென்னை மரத்தில் ஏறினார். உச்சிவரை சென்று கிளைகளுக்கு இடையே மறைந்து போனார். பிறகு ஏறிய வேகத்திலேயே மூச்சிறைக்க இறங்கினார்.


மரம் ஏறிய வீடியோவை பகிர்ந்த சஞ்சனா, ’இருபது வருடத்துக்கு பின் இப்போது தென்னை மரம் ஏறி உள்ளேன். நன்றாக ஏறினேன்தானே? இந்த நேரம் சிறுவயது ஞாபகம் வந்து விட்டது’ என்றார்.
சஞ்சனா மரம் ஏறும்போது அவரையே பார்த்துக்கொண்டிருந்த அவரது செல்ல நாய்க்குட்டி அவர் கீழே இறங்கி வந்ததும் ஒடிச் சென்று அவரது காலை சுற்றிக்கொண்டது.
https://www.youtube.com/watch?v=lCO786G9SfQ