2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது .
அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று (ஜூலை 29) நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் லுக்கை வெளியிட்டு அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு. இதற்கு சஞ்சய் தத் நன்றி தெரிவித்துள்ளார்.