துபாயில், குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும்  சஞ்சய் தத்..

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தனது குழந்தைகள் ஷாகரான் மற்றும் இக்ராவுடன் துபாயில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் சஞ்சய் தத், சுவாச கோளாறு காரணமாக மும்பை யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களில் வீடு திரும்பிய அவர், மருத்துவ காரணங்களால் , தான் கொஞ்சநாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

சஞ்சய் தத்துக்கு என்ன கோளாறு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவரது சினிமா வட்டார நண்பர்கள் , சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளதாகவும், அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சஞ்சய் தத்தை .பார்ப்பதற்கு அவர் மனைவி மான்யதா, துபாயில் இருந்து ஊரடங்கு நேரத்தில் மும்பை வந்து கணவருடன் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன்பு இருவரும் துபாய் புறப்பட்டு சென்றார்கள்.

இந்நிலையில் துபாயில் , சஞ்சய் தத்-மான்யதா தம்பதியர் தங்கள், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் நேற்று வெளியானது.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மான்யதா’’ கடவுளுக்கு நன்றி’’ என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.