ந்தி நடிகர் சஞ்சய் தத், மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் சஞ்சய் தத் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ’’புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அவர் அமெரிக்கா செல்லப்போகிறார்’’ என அவரது நண்பர்கள் வட்டாரம் கூறிவந்த நிலையில், அவரது வெளிநாட்டு பயணம் எப்போது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா செல்வதற்கு சஞ்சய் தத் ‘ 5 ஆண்டு மருத்துவ விசா’’ கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
விசா கிடைத்ததும், மனைவி மானயாதா மற்றும் சகோதரி பிரியாதத்தாவுடன் அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லவிருக்கிறார்.

சஞ்சய் தத், நியூயார்க்கில் உள்ள ‘ SION CATERING CANCER CENTER’’ மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என தகவல் கிடைத்துள்ளது.

உலகின் முதல் தரமான இந்த புற்றுநோய் மருத்துவமனையில் தான்,சஞ்சய் தத்தின் தாயாரும், நடிகையுமான நர்கீஸ், கடந்த 1980- 81 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தி நடிகைகள் மனிஷா கொய்லாரா, சோனாலி பாந்த்ரே ஆகியோரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி