சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது .

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சடக் 2’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

மகேஷ் பட் இயக்கி, அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் ‘சடக் 2’, வாரிசு அரசியலின் முகம். அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் குரல்கள் வலுத்துள்ளன. இதுவரை யூடியூபில் அதிகம் டிஸ்லைக் பெற்றுள்ள ட்ரெய்லர் என்ற சாதனையை ‘சடக் 2’ படைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி ‘சடக் 2’, டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

மருத்துவச் சிகிச்சைக்காக ஓய்வு எடுக்கும் முன் ‘சடக் 2’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க நடிகர் சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார்.

வெறுப்பைத் தாண்டி படத்தை அதன் கதைக்காக, நடிகர்களின் நடிப்புக்காக மக்கள் பார்ப்பார்கள் என்று சஞ்சய் நம்புகிறார்.