‘’ஆண்டவன் சோதிக்கிறான்’’ -சஞ்சய் தத் மனைவி உருக்கம்..

‘’ஆண்டவன் சோதிக்கிறான்’’ -சஞ்சய் தத் மனைவி உருக்கம்..

இந்தி சினிமா உலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்லவிருப்பதாக மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், ‘’ சஞ்சய் தத்! நீங்கள் ஒரு போராளி. இந்த சிக்கலில் இருந்து மீள்வீர்கள்’’ என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ட்வீட் செய்திருந்தார்.

அவர், புற்றுநோயில் இருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது துபாயில், தனது இரட்டை குழந்தைகளுடன்  இருக்கும் சஞ்சய் தத் மனைவி  மான்யதா, வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில்’’ சஞ்சய் தத், போராளி. முந்தைய காலங்களிலும் அவர் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

மீண்டும் அவரை ஆண்டவன் சோதிக்கிறான்.இதில் இருந்தும் அவர் மீண்டு வருவார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மான்யதா, சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவி.

சஞ்சய் தத்துக்கு  முதல் மனைவி ரிச்சா சர்மா மூலம் பிறந்த மகள் திரிஷாலா, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.