டில்லி உள்பட 6 மாநில போதை ஒழிப்பு தூதராக சஞ்சய் தத் நியமனம்

டில்லி:

6 மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக இந்தி நடிகர் சஞ்சய் தத் நியமிக்கபடவுள்ளார்.

இது குறித்து சஞ்சய் தத்துடன் போனில் பேசியதாக உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் தெரிவித்துள்ளார். அப்போது ​​திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் தானும் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததை அவர் நினைகூர்ந்ததாகவும் கூறினார்.

உத்தராகண்ட், டில்லி, இமாச்சல், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .