‘ரக்‌ஷக்’ கிராஃபிக் நாவல் திரைப்படமாகிறது…!

‘ரக்‌ஷக்’ என்கிற இந்திய கிராஃபிக் நாவலைத் திரைப்படமாக்குவதற்கான உரிமையை இயக்குநர் சஞ்சய் குப்தாவின் வைட் ஃபெதர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை குப்தாவே இயக்கவுள்ளார்.

இந்தியாவில் ஒரு கிராஃபிக் நாவல் பிரம்மாண்டமான திரைப்படமாவது இதுவே முதல் முறை.

கிராஃபிக் நாவல்கள் திரைப்படமாவது ஹாலிவுட்டில் தான் வழக்கம். இந்தியாவில் கிராஃபிக் நாவல்கள் இன்னமும் பெருவாரியான மக்களிடம் போய்ச் சேராத நிலையில் ‘ரக்‌ஷக்’ ஒரு திருப்புமுனையாக அமையவுள்ளது .

கார்ட்டூன் கேலரி