மும்பை :

சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், தீப்பொறி பேச்சாளரும் ஆவார். அந்த கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனசாட்சியாக இருப்பவர்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் “ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். அரசியலுக்கு வந்துள்ள வாரிசுகளில் தேஜஸ்வி மிகவும் புத்திசாலி. தந்தை ஜெயிலில் இருக்கிறார். சி.பி.ஐ., வருமான வரித்துறை துளைத்தெடுக்கிறது. ஆனால் எந்த ஆதரவும் இல்லாமல் அவர் போராடிகொண்டிருக்கிறார். தேஜஸ்வி யாதவ், பீகார் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்க சீனாவின் ஆதரவை நாடுவோம் என சொல்லிவரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை அந்தமான் சிறையில் பத்து ஆண்டுகள் அடைக்க வேண்டும்” என சஞ்சய் ராவத் வலியுறுத்தினார்.

– பா.பாரதி