Random image

பாராளுமன்ற இரு அவைகளுக்கும் ஒரே சிவசேனை தலைவர்

மும்பை

பாராளுமன்றத்தின் மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவை ஆகிய இரு அவைகளுக்கும் சிவசேனை தலைவராக சஞ்சய் ரௌத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.   மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அடங்கிய மக்கள் அவை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய மாநிலங்கள் அவை என இரு அவைகள் உண்டு.   இரு அவைகளிலும் அனேகமாக அனைத்துக் கட்சிகளுக்கும் உறுப்பினர் இருப்பார்கள்.   அவர்களில் ஒவ்வொருவர் அவையின் கட்சித் தலைவராக இருப்பார்கள்.

சிவசேனா கட்சியின் மக்களவை உறுப்பினர்களுக்கு தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.  இதனால் சமீபத்தில் நடந்த பாஜக மீதான நம்பிக்கை இல்லா திர்மானத்தின் போது சிவசேனா உறுப்பினர்கள் இடையே வாக்களிப்பு குறித்து முடிவு செய்வதில் ஒரு சிறு குழப்பம் நிலவியது.   அதனால் சிவசேனா உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்றதாக கூறப்பட்டது.

அதனால் சிவசேனை கட்சியின் தலைவர் உதவ் தாக்கரே தலையிட்டு வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள வேண்டாம் என ஆணை இட்டார்.   அதில் இருந்து அவைகளின் உறுப்பினர்களுக்கு தலைவர் நியமிக்கும் முயற்சியில் சிவசேனை கட்சி நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. அதை ஒட்டி சிவசேனை கட்சி தலைவர் உதவ் தாக்கரே மக்களவை சபாநாயகருக்கு ஒரு கடிதம் எசுதிஉள்ளார்.

அந்த கடிதத்தில் சிவசேனை கட்சியின் இரு அவை உறுப்பினர்களுக்கும் தலைவராக மாநிலங்கள் அவை உறுப்பினரான சஞ்சய் ரௌத் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.