சென்னை: சென்னை  உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சிப் பானர்ஜி வரும் 4ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  நீதிபதி ஏபி. ஷாகி பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக,  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது  தலைமை நீதிபதியாக நீதிபதி  சஞ்சிப் பானர்ஜி வரும் 4ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.

சஞ்சிப் பானர்ஜி தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.  இவர்  ஏற்கனவே டில்லி, மும்பை, ஜார்க்கண்ட், கவுகாத்தி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநில நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி  உள்ளது குறிப்பிடத்தக்கது.