நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான பெங்களூரைச் சேர்ந்த சஞ்சனா கல்ராணி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துளார். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.