இந்த ஆண்டில் அதிக முதல் நாள் வசூல் ஈட்டிய ‘சஞ்சு’

மும்பை

ர்ச்சைக்குரிய நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையான ‘சஞ்சு’ இந்திப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்திப் பட உலகில் நடிகர் சஞ்சய் தத் சர்ச்சைக்குரியவராக இருந்துள்ளார்.   பிரபல நடிகர் – நடிகை தம்பதியருக்கு மகனாக பிறந்து இளமைக் காதல், சினிமா உலக பிரவேசம்,  போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்றது என ஆரம்பித்த இவர் வாழ்க்கை ஆயுத வழக்கு, சிறை தண்டனை வரை சென்றது.   இவரது வாழ்க்கை ‘சஞ்சு’ என்னும் பெயரில் படமாகி வெளி வந்துள்ளது

இந்தப் படத்தின் டீசர் வந்ததில் இருந்தே மக்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பிடித்தது.   நடிகர் சஞ்சய் தத்தாக நடித்த ரண்பீர் கபூர் அச்சு அசலாக சஞ்சய் தத் போலவே உள்ளதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.   இந்த நிலையில் சஞ்சு இந்திப் படம் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.  முதல் நாள் வசூல் இந்த ஆண்டில் அதிக வசூல் என கூறப்படுகிறது.   இந்தப் படத்துக்கு இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.32-34 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.50 கோடியை தாண்டி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.