‘பாகுபலி’ வசூலை மிஞ்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது ‘சஞ்சு’

கடந்த வாரம் வெளியான சஞ்சு என்ற இந்தி படம், வசூலில் முந்தைய வெற்றிப்படமான பாகுபலி யின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சஞ்சு திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படம் ஒரே நாளில் 47.71 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே பாகுபலி படம் ஒரே நாளில் 46.50 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்திருந்த நிலையில், அந்த சாதனையை சஞ்சு படம் முறியடித்து உள்ளது.

இந்தபடம்  வெளியான மூன்றே நாளில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை  சஞ்சு கைப்பற்றி உள்ளது.  முதல் நாளில் 46.71 கோடி வசூலித்து புதிய வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையை குறித்து எடுக்கப்பட்டது இந்த படம். இந்த படத்தில், சஞ்யத் தத் எந்த தவறும் செய்யாதவர், சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவரை சிறைக்குச் செல்ல வைத்தது என்று கதையம்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் சஞ்சு படம் விரைவில்  300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'பாகுபலி' வசூலை மிஞ்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது 'சஞ்சு', highest collections for an Indian film, Sanju Move create New Record
-=-