ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சஞ்சு சாம்சன்.

கடந்தமுறை கேப்டனாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தமுறை அந்த அணியிலேயே இல்லை. அவர் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த தொடரில், சில போட்டிகளில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், இந்தமுறை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அந்த அணிக்காக ஆடி வருகிறார்.

கேரளாவைச் ச‍ேர்ந்தவரான இவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். இவருக்கு தற்போது வயது 26. இவர், முந்தைய காலங்களில் கொல்கத்தா அணிக்காகவும் ஆடியுள்ளார்.

“ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. தோனி, கோலி மற்றும் ரோகித் ஆகியோரிடமிருந்து வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன. பயிற்சியாளர் சங்ககாராவின் அனுபவம், அணிக்கு பெரிதும் கைகொடுக்கும்” என்றுள்ளார் சஞ்சு சாம்சன்.